--- --:--:-- --

கொரொனா சிகிச்சைக்கான ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த வேண்டாம்..!

2

கொரொனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. ரெம்டெசிவர் மருந்தை உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கொரொனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவர் நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டு 7000 கொரொனா நோயாளிகளிடம் உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.

 

அதில் கொரொனா தொற்றுக்கான நோயாளிகளின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்துக் கொரொனா பாதிப்புக்கு ரெம்டெசிவர் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

இதனிடையே கொரொனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து நல்ல பலனை அளிக்கிறது என தமிழக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon