“அனுபவமே பாடம்!!”..தவறை தவிர்த்திருக்கலாம்… சொத்து வரி பிரச்னையில் “சூடு”பட்ட பின் ரஜினி “டுவீட்”!!
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 6.50 லட்சம் தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிக்கு நீதிபதி குட்டு வைத்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், இப்பிரச்னையில் மாரகராட்சியில் மேல்முறையீடு செய்து தவறை தவிர்த்திருக்கலாம். “அனுபவமே பாடம்” என ரஜினி, வழக்குத் தொடர்ந்த தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பது போல், சூடுபட்ட பூனையாக டூவீட் செய்திருப்ப்பது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் 6 மாதமாக தமது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அப்படி மூடிக்கிடந்த மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி எப்படி ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பலாம் என்ற ஆதங்கத்துடன் சொத்து வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு எதிராக ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ரஜினி தரப்பை நீதிபதி எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
நோட்டீசுக்கு எதிராக மாநகராட்சியில் முறையீடு செய்து, பதிலுக்கான அவகாசம் உள்ள நிலையில் அவசரப்பட்டு வழக்கு தொடர்ந்தது ஏன்? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கலாமா? இது என்ன மாநகராட்சி அலுவலமா? என்று சரமாரியாக குட்டு வைத்ததுடன் கடுமையான அபராதம் விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆடிப் போன ரஜினி தாப்பு, உயர் நீதிமன்றத்தில் மன்றாடி வருத்தம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பாகி ரஜினி மீது விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக ரஜினி இன்று ஒரு டுவீட் செய்துள்ளார். அதில் தமது செயல் தப்புதான் என அவர் ஒத்துக் கொள்வது போல் உள்ளது. அந்த பதிவில்,
ராகவேந்திரா மண்டப சொத்து வரி..
நாம் மாநகராட்சியில் மேல் முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறை தவிர்த்திருக்கலாம்.
# அனுபவமே _ பாடம்…
என ரஜினி டுவீட் செய்துள்ளார். பட்ட பின் புத்தி வரும் என்பார்கள். உயர்நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட ரஜினி விஷயத்தில் ரொம்பவே கரெக்ட் தான் போலும். அவரே அதனை ஒத்துக் கொண்டது தான் ரொம்பவும் பெருந்தன்மை என்றும் கூட கூறலாம்.






