--- --:--:-- --

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது..!

12

பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சென்னை – மதுரை இடையே வரும் 19ஆம் தேதி முதல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு இரயில் இயக்கப்படுகின்றன . சென்னை-கோவை இடையே செவ்வாய் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

சென்னை- டில்லி இடையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துரந்தோ ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

இதேபோல திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சாலிமருக்கும் கன்னியாகுமரியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுராவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon