மர காளானை சமைத்து உண்ட முதியவர் உயிரிழப்பு..!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே மர காளானை சமைத்து உண்ட முதியவர் உயிரிழந்தார். 75 வயதில் தனது வயலில் இருந்து கொண்டு வந்த காளனை வீட்டில் சமைத்து மனைவி, மகன் மகளுடன் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்தில் நான்கு பேரும் வாந்தி எடுத்த நிலையில் செம்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






