--- --:--:-- --

மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீடித்தால் நான் வியப்படைய மாட்டேன் – சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் கார்த்திக் ப. சிதம்பரம் பேட்டி

4.1

சிவகங்கை மாவட்டம் ஓசூரில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் கோபுர மின் விளக்கினை துவக்கி வைத்தார். பின்னர் வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகை சங்ககிரியின் இல்லத்திற்கு சென்று ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ப. சிதம்பரம் மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீடித்தால் நான் வியப்படைய மாட்டேன் என்றும், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தடுப்பதால் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் மாவட்ட மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வரும், தமிழகத்தைப் போல் இந்தியா முழுவதும் வாக்களித்து நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.10,000 கொடுத்திருப்போம் என ப.கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon