காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை இரும்புக் கம்பியால் குத்திய இளைஞன் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். சோநம்மியந்தல் கிராமத்தில் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்த பிரசாத் என்பவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளான்.

 

ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பிரசாத் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த இளைஞனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply