சென்னை அயனாவரத்தை சேர்ந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருத்தணிக்கு கடத்தி சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஆந்திராவில் பிடிபட்டுள்ளார்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி தனது பாட்டியுடன் சண்டை போட்டுவிட்டு பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுமியை வெங்கடேசன் என்பவர் ஏமாற்றி தனது சொந்த ஊரான திருத்தணிக்கு கடத்தி சென்றுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு வெங்கடேசன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமியை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு சென்னை போலீசிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரேணிகுண்டாவில் பதுங்கியிருந்த திருத்தணி வெங்கடேசனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.