--- --:--:-- --

மதுரை காளவாசல் பகுதியில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்

0.2

இதனையடுத்து உயர்மட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது,மதுரை நகரின் முக்கிய பகுதியாக காளவாசல் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் பல்கலைக்கழகம் தேனி மாவட்டம் செல்வதற்கும் நகரின் தென்பகுதியிலிருந்து பை –பாஸ் சாலை வழியாக திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.

 

இதைத் தவிர்க்கும் வகையில் 54 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 17 மீட்டர் அகலமும் 750 மீட்டர் நீளமும் கொண்ட இந்த மேம்பாலம் கட்டும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே, இப்பாலத்தை பொதுப் போக்குவரத்துக்கு அர்ப்பணிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து உயர்மட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தை மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

 

தொடர்ந்து மதுரை நகர் மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், சோலை ராஜா மற்றும் அண்ணா தி.மு.க.வினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon