--- --:--:-- --

சென்னை காவலர்களுக்கு சுழற்சி முறையில் 10 நாட்கள் ஓய்வு!

8

சென்னையில் காவல் துறையினருக்கு சுழற்சிமுறையில் 7 நாட்கள் முதல் 10 நாள் வரை ஓய்வு வழங்க காவல் ஆணையர் ஏ‌கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

இதுவரை 320 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாகசென்னை காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரை யில் ஓய்வு அளிக்க காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல்துறையினர் இந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையை பொருத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சுழற்சி முறையில் அனைத்து காவல் துறையினரும் பயன்பெறும் வகையில் விடுப்பை பிரித்து வழங்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon