நேற்று திருப்பூரில் திடீரென நேரிட்ட சத்தத்தால் மக்கள் அச்சம்..!
அதி வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட சூப்பர்சோனிக் விமானம் பறந்து சென்றதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானில் ஏற்பட்ட வெடி போன்று சத்தத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்கலம், அவிநாசி, பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல், அவினாசி, வெள்ள கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை 11 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டது.
இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில் அது சூப்பர்சோனிக் விமானத்தால் ஏற்பட்ட சத்தம் என்றும் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
சூலூர் விமானப்படை தளத்துக்கு அளிக்கப்பட்ட சூப்பர்சோனிக் விமானம் சோதனை ரீதியில் இயக்கிப் பார்க்கப் பட்டதாகவும் அதனால் சப்தம் நேரிட்டது எனவும் கூறப்படுகிறது.






