--- --:--:-- --

சொத்துக்காக தந்தையை ஊசியால் குத்திக் கொலை செய்த மகன் கைது!

8

சேலம் சூரமங்கலத்தில் சொத்திற்காக தந்தையை ஊசியால் குத்திக் கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த மகனை போலீசார் கைது செய்தனர்.

 

ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டராக கிருஷ்ணன் என்பவர் மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில் அவரின் 6000 சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு மாற்றுமாறு மகன் அன்புமணி அடிக்கடி வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இதேபோல கடந்த ஞாயிற்றுக் கிழமையும் அன்புமணி தந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் சொத்து எழுதி தர மறுத்ததால் ஆத்திரத்தில் கிருஷ்ணசாமியை ஊசியால் பல இடங்களில் குத்தி கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவான அன்புமணியை நேற்று கைது செய்து குத்தூசி பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon