--- --:--:-- --

பொதுமுடக்கத்தின் நோக்கம் தோல்வியை அடைந்து விட்டது!

1

மத்திய அரசின் பொது முடக்கத் திட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்து வருகிறார். டெல்லியில் காணொளி முறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரு மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் இருந்தும் கொரொனா வைரஸ் பரவலை குறைக்க முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

 

உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் கட்டுப்பாடுகள் அகற்றப் படும் வேளையில் தொற்றுகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி கூறினார். இதன் மூலம் பொது முடக்கத்தை அரசு எதற்காக கொண்டு வந்ததோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பது தெரிந்துவிட்டது என்று கூறினார்.

 

இதுபோன்ற சூழலில் அடுத்து மேற்கொள்ளப்படும் செயல் திட்டம் என்ன என்பதை பிரதமர் மோடி விளக்கம் வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நேரடியாக நிதியுதவி தருமாறு அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon