தென்கொரியாவில் இருந்து 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வருகை!

கொரொனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒன்றரை லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது. நாட்டிலேயே அதிக பரிசோதனை நடக்கும் மாநிலமாக உள்ள தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க அரசு கூடுதலாக பிசிஆர் கருவிகளை வாங்கி வருகிறது. முதற்கட்டமாக கடந்த 17ஆம் தேதி தென்னிந்தியாவிலிருந்து ஒரு லட்சம் பி‌சி‌ஆர் கருவிகள் தமிழகம் வந்தன.

 

இரண்டாம் கட்டமாக இன்று மேலும் 1 லட்சம் பி‌சி‌ஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை உலகின் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தற்போது வரை இரண்டரை லட்சம் பி‌சி‌ஆர் கருவிகள் உள்ள நிலையில் வரும் வாரங்களில் வாரத்திற்கு ஒரு முறை ஒரு லட்சம் பி‌சி‌ஆர் கிட் விகிதம் மீதமுள்ள ஏழரை லட்சம் பி‌சி‌ஆர் கிட்கள் வரை இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை பி‌சி‌ஆர் கருவிகள் மூலம் 3 லட்சத்து 85 ஆயிரத்து 185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


Leave a Reply