--- --:--:-- --

ஜூன் 25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கம்!

4

விமானங்களுக்கான முன்பதிவை விமான நிறுவனங்கள் இன்று தொடங்குகின்றன. ஸ்பைஸ்ஜெட் போன்ற தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து பயணிகளை ஏற்ற திட்டமிட்டுள்ளன.

 

உள்நாட்டு விமானப்போக்குவரத்திற்கு வருகிற 25-ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ள விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் தடுமாறி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

 

இதனிடையே அனைத்து விமான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனரக அதிகாரிகள் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். விமானத்தில் பயணிகளை முழு அளவில் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வரிசையில் நிற்கும் போது இரண்டு நபர் இடைவெளி விட்டு தள்ளி நிற்பது உரிய நடைமுறைகளை விமான நிலையங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon