இரு பெண்களுக்கு ஒரு இளைஞர் கொடுத்த முத்தத்தால்…. இளம்பெண்கள் ஆணவக் கொலை!

பாகிஸ்தானில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரல் ஆனதையடுத்து அந்த வீடியோவில் இருந்த இரண்டு பெண்களும் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் வைரலாகியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் இரண்டு இளம் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது போலவும் அருகில் மூன்றாவதாக மற்றொரு பெண் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 

இதையடுத்து உறவினர்கள் இரண்டு பெண்களையும் அவர்களது குடும்பத்தினர் ஆணவ கொலை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு பெண்ணின் தந்தையையும் மற்றொரு பெண்ணின் சகோதரனையும் கைது செய்திருக்கும் போலீசார் வீடியோவில் தோன்றிய இளைஞரை கைது செய்திருக்கிறார்கள்.


Leave a Reply