--- --:--:-- --

திருவாடானை அருகே போதைக்காக மாத்திரை சாப்பிட்ட நபர் பலியானார்!

1.2

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது தந்தை சுல்தான் சென்னையில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். மதுவிற்கு அடிமையான சதாம் உசேன் அருகில் உள்ள மருந்து கடையில் கடந்த 26ம் தேதி தனது நண்பர்களுடன் சென்று திணையத்தூர் கிராமத்தில் உள்ள மருந்து கடையில் போதைக்காக மாத்திரைகள் வாங்கி அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு மயக்கமடைந்தார். உடனிருந்த நண்பர்கள் தொண்டி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் கெடுத்த புகாரின் பேரில் மருந்து கடை உரிமையாளர் பிரபு, உள்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் இறந்து போனார். இவரது மனைவி நிறைமாத கற்பிணி என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு போதைக்காக கண்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் இளைஞர்கள் கடைசியில் உயிர் இழக்க நேரிடும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon