குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: குஞ்சங்குளம் பஞ்சாயத்து, கிராமங்களில் வெளிச்சம் பிறந்தது

Publish by: ஆனந்த்குமார் --- Photo :


ராமநாதபுரம் மாவட்டத்தில், இருளில் மூழ்கி கிடக்கும் குஞ்சங்குளம் பஞ்சாயத்து கிராமங்கள்! கொஞ்சம் கூட வேலைக்கு ஆகாத ஊராட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் இன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

 

அதில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தெருவிளக்குகள், சாலையோர மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் கடந்த மூன்று தினங்களாக எரியாமல் உள்ளது.

 

திருவாடாைனை ஒன்றியத்துக்குட்பட்ட பல ஊராட்சி பகுதிகளில், குறிப்பாக குஞ்சங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள கீழக்கோட்டை, சீந்திவயல், திணைக்காத்தான் வயல் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல், மின்கம்பங்கள் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளன. சாலையோர விளக்குகளின் நிலையும் இதுதான்.

இதனால், இருள் சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரத்தில் கிராமத்திற்குள் செல்வதற்குள் பொதுமக்கள் படாதபாடுபடுகின்றனர் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

பழுதான மின்விளக்குகளை உடனடியாக மாற்ற வேண்டுமென, பலமுறை  ஊராட்சி நிர்வாத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், குற்றம் குற்றமே புலனாய்வு இதழின் இணையதளத்தில் இன்று காலை செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாலை அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்கு எரிய தொடங்கியது.

 

இதனால்  மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அனைவரும் நமது குற்றம் குற்றமே இதழுக்கு   நன்றி தெரிவித்தனர்.


Leave a Reply