தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புதுக்கோட்டை ,சிவகங்கை, இராமநாதபுரம் ,விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply