பெண்ணை காப்பாற்ற முயன்ற பெண் காவலர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே நஞ்சருந்திய பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல உதவிய பெண் காவலருக்கு காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். மேலத்தூவல் கிராமத்தை சேர்ந்த ராமு வேல் என்ற பெண் குடும்ப பிரச்சினையால் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அவரை மீட்டு உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மகிமா என்ற காவலர் அவர்களிடம் நடந்ததை அறிந்து காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக அவசர மருத்துவ ஊர்தி வரவழைத்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். எனினும், ராமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த காவலர் மகிமாவை காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டிய விருதும் வழங்கியுள்ளார்.


Leave a Reply