மனிதர்கள் உடலில் கிருமி நாசினியை செலுத்தி பார்க்கலாம் : அதிபரின் சர்ச்சை பேச்சு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வெப்பத்தால் கொரொனா வைரஸ் தீவிரம் குறைகிறது என்றால் ஒளியை பாய்ச்சி நோயாளிகளுக்கு பரிசோதித்து பார்க்கலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சூரிய வெப்பம் இருக்கும் இடங்களில் கொரொனா வைரஸின் தாக்கம் பாதியாக குறைவதாக அமெரிக்காவின் தேசிய பகுப்பாய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

காற்றில் இருக்கும் கொரொனா வைரஸ் சூரிய ஒளி பட்டதும் ஒன்றரை நிமிடங்களில் அழிந்து விடுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வயலட் கதிர்களை காட்டினால் கொரொனா வைரஸ் அழிந்துவிடுமா என்பதை சோதித்துப் பார்த்தால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதேபோல கிருமிநாசினி ஒரு நிமிடத்தில் கொரொனா வைரசை அழித்து விடுகிறது என கேள்வி பட்டதாக கூறும் டிரம்ப் இதனால் கிருமி நாசினியை உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்ய முடியுமா என நகைச்சுவையாக பேசினார். டிரம்பின் இந்த பேச்சு ஆபத்தானது என்றும், விசித்திரமானது என்றும் மருத்துவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

 

கொரொனாவால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஹோட்டல் முன்பாக இறந்தவர் உடலை வைக்கும் பிளாஸ்டிக் பைகளை வரிசையாக வைத்த போராட்டக்காரர்கள் அதிபரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

 

அமெரிக்காவில் கொரொனாவால் பல ஆயிரக்கணக்கானோர் தினசரி உயிரிழந்து வரும் நிலையில் இந்த பிரச்சனையை சரிவரக் கையாளத அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார் . மழைக்கு மத்தியில் முக கவசம் அணிந்து போராட்டம் நடைபெற்றது.


Leave a Reply