--- --:--:-- --

மே 3-ந் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? 27-ந் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

8

மே 3-ந்தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், முதல் கட்டமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தான் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 2-ம் கட்டமாக வரும் மே 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

 

ஊரடங்கு 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட போது ஏப்ரல் 20-ந் தேதி முதல் சில துறைகளுக்கு தளர்வு என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், ம.பி., குஜராத், தமிழ்நாடு, மே.வங்கம், ஆந்திரா, தெலங்கானா போன்ற முக்கிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியதால் சாத்தியமாகவில்லை.

 

மேலும் இனிமேல் தான் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதும் இப்போது தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளின் தரம் பற்றிய கேள்வி எழுந்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் அவசரப்பட்டு ஊரடங்க தளர்த்திவிட வேண்டாம். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தொடர் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் கொரோனா பரவல் இப்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சிங்கப்பூர், சவூதி அரேபியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

எனவே இந்தியாவிலும் ஊரடங்கை பல்வேறு மாநிலங்களிலும் மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய கட்டாயமே நிலவுகிறது. இதனால் வரும் 27-ந் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத கோவா, மணிப்பூர், அருணாச்சல் உள்ளிட்ட மாநிலங்கள், மற்றும் சில மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்வது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா , டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படவே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon