கொரொனாவில் இருந்து மீண்ட பெண் வெளியிட்ட டிக்டாக்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரொனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில் அவர் கொரொனாவில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பது குறித்து டிக்டாக்வீடியோ வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் பணி செய்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான அரியலூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

தற்போது முழுமையாக குணமடைந்த அவர் வீடு திரும்பியுள்ளார். முன்னதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கி கைதட்டி அந்த பெண்ணை வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும்போது பொழுதுபோக்கிற்காக தாம் செய்த படம் வரைதல், கவிதை எழுதுதல் உள்ளிட்டவற்றை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.

 

மேலும் கொரொனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தனிமையில் இருக்கும் போது எவ்வாறு நேரத்தை செலவிடலாம் என்பது குறித்து நாம் உட்கொண்ட உணவுகள் குறித்தும் டிக்டாக்வீடியோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளூர் அருகே வீட்டை விட்டு யாரும் வெளிவரக் கூடாது என்பதை வலியுறுத்தி தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதோடு கொரொனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

 

அந்த வகையான வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பாடல் பாடி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply