போலீசார் தடுத்து நிறுத்தியதால் வசைபாடிய முதியவர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடக மாநிலம் மங்களூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய முதியவர் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. லால்பாக் பகுதியில் காரில் பயணித்த போது போலீசார் தடுத்து நிறுத்தி ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் வெகுண்டு எழுந்த அந்த முதியவர் தான் ஆடிட்டர் என்றும் தன்னிடம் அனுமதி கேட்கிறாயா என்று ஆபாச வார்த்தைகளில் வசிய பாடியதாக கூறப்படுகிறது.

 

சாலை தடுப்புகளை அகற்ற முயன்று ஆக்சன் காட்டியதால் அந்த முதியவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம் ரெட் அலர்ட் பகுதியாக இருப்பதால் பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் சேலம் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஏழு பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

 

தற்போது கொரொனா தொற்று உள்ள 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். சேலம் மாவட்டம் ரெட் அலர்ட் பகுதியாக இருப்பதால் அனைவரும் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார். பொது மக்கள் முக கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


Leave a Reply