அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் கொரொனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பில் உச்சத்தை தொட்டு அதனை கடந்து விட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். கொரொனா வைரசால் அதிகம் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளை சந்தித்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

அந்நாட்டில் 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். வைரஸுக்கு ஒரே நாளில் சுமார் 2,600 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றின் மையமாக மாறிய அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் மிக அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது .

 

அங்கு மட்டும் 11 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், கொரொனா வைரசால் சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு வரை இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதியை அதிபர் டிரம்ப் முறையாக வழங்குவதில்லை என ஆளுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கை தளர்த்துவது குறித்து டிரம்ப் அறிவிக்க உள்ளார். கொரொனாவுக்கு எதிராக போராடுவதற்கு பலன் கிடைத்து இருப்பதாக கூறிய டிரம்ப் போர் தொடர்ந்து வருவதாகவும் பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தைத் தொட்டு அதனை கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா வைரஸ் பாதிப்பின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிபர் டிரம்ப் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்திய வம்சாவளியினரான சுந்தர் பிச்சை சத்யா நாதெல்லா ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலிசின், பேஸ்புக்கின் மாக்சுகபுக் ஆகியோர் இணைந்துள்ளனர்.

 

இதுதவிர வேலான், வங்கி, கட்டுமானம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களையும் டிரம்ப் நியமித்துள்ளார். துறை சார்ந்த நிபுணர்கள் மிகவும் புத்திசாலிகள் என கூறியுள்ள டிரம்ப் இவர்கள் தங்களுக்கு புதிய யோசனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply