கொரோனா நிவாரண உதவி காசோலைகளில் தனது பெயரை பொறிக்க உத்தரவிட்ட அதிபர் ட்ரம்ப்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை பொறிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரொனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

 

இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரும் இந்திய மதிப்பில் சுமார் 91 ஆயிரம் ரூபாய் நேரம் நேரடி இருப்பு வைக்கவும் காசோலையாகவும் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பணிகள் தாமதம் ஆகும் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்பட உள்ள 91 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையில் தனது பெயரை பொரித்து தர அதுபற்றி உத்தரவிட்டு உள்ளதே இதற்கு காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் ப்ரோகிராமை மாற்றி காசோலையில் டிரம்ப் பெயர் பொரிக்கப்பட்ட பிறகு அமெரிக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

ஒரு அமெரிக்க அதிபரின் பெயர் இவ்விதம் நிவாரண காசோலைகளில் பதிக்கப்படுவது இதுவே முதன் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை டிரம்ப் கையாளும் விதம் பற்றிய அமெரிக்க ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply