பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசிய பெண்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ராஜஸ்தானில் ஒரு பெண் பிளாஸ்டிக் பைகளில் எச்சிலை துப்பி அதனை வீடுகளுக்குள் வீசுகின்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரொனா வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.

 

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் வள்ளம்பாடி பகுதியில் ஒரு பெண் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி அதனை வீடுகளுக்குள் வீசி எறிந்தது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து உடனடியாக அந்த பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி காவல்துறையினர் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply