மயானம் முன்பு வீசிச் செல்லப்பட்ட ஆந்திர மருத்துவரின் உடல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை அம்பத்தூர் மயானத்தில் ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் உடலை அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் வீசி சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மாலை திடீரென ஆம்புலன்ஸ் ஒன்றில் கவச உடைகள் உடன் வந்து இறங்கிய 4 பேர் மருத்துவரின் உடலை மயானத்தில் முன் பேசி விட்டு அங்கிருந்து உடனடியாக சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்த காட்சியை பார்த்த மயான ஊழியர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் மருத்துவர் ஒருவர் கொரொனாவால் உயிரிழந்தாரா அல்லது சாதாரண காய்ச்சலால் உயிரிழந்தாரா, ஏன் அவரது உடல் அங்கு கொண்டு வரப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

 

இதனிடையே மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடல் மீண்டும் மாநகர அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Leave a Reply