கொரொனாவால் கலையிழந்து காணப்பட்ட சித்திரை திருவிழா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருப்பதால் தமிழ் புத்தாண்டு கலை இழந்து காணப்படுகிறது. கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீடுகளிலேயே மக்கள், கடவுள் வழிபாடுகளை மேற்கொண்டனர். சித்திரை மாதப் பிறப்பு தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று வழக்கமான உற்சாகம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் பழங்களை படைத்து அதனை வழிபட்டு சிறப்பு பூஜைகளை செய்தனர். வழக்கமாக இந்நாட்களில் ஆன்மீக தலங்களுக்கு செல்லும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளன.


Leave a Reply