பணத்தாள் மூலம் கொரொனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பணத்தின் மூலமாக கொரொனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பார்க்கலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் அதே வேளையில் பணத்தை மாற்றும் போதும் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் பணத்தாலும் நாட்கணக்கில் வைரஸ்கள் இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

 

பணத்தை கையாண்ட உடனடியாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பல இடங்களில் ஆன்லைனில் பணத்தை அளிக்கும் வசதிகள் இல்லாததால் பணத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே கொரொனா வைரஸ் நம்மை அடையாமல் இருக்க பணத்தையும் பாதுகாப்புடன் கையாள வேண்டியது அவசியம்.

 

கடைகளுக்கு செல்லும்போது பொருட்களை வாங்கிவிட்டு கொடுக்கும்போது டிஷ்யு பேப்பரைக் கொண்டு பணத்தைப் பிடித்துக் கொடுக்கலாம். வியாபாரிகளும் பணத்தை வாங்கும்போது இந்த நடைமுறையை கடைபிடித்தால் சிறந்தது. அந்த டிஷ்யூ பேப்பரை குப்பைத் தொட்டிக்குள் பாதுகாப்பாக போட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் பணத்தை பெற டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது வியாபாரிகளுக்கு கடும் சிரமமாக இருக்கலாம்.

 

கையுறை அணிந்த படியே வியாபாரிகள் வேலை செய்வது சிறந்தது. அதேசமயம் அந்த பேப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கடைகளுக்கு சென்று விட்டு திரும்பும் போது கைபடாத பகுதியில் பணத்தை வைத்து விட்டு கைகளை சோப்புப் போட்டு இருபது வினாடிகளுக்கு கழுவவேண்டும். பணத்தை எண்ணி முடித்த பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

 

முக்கியமாக பணத்தை எண்ணும் போது நம்மை அறியாமல் நாவில் எச்சில் தொட்டு பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.மேலும் குழந்தைகளிடம் பணத் தாள்களை கொடுக்க வேண்டாம்.


Leave a Reply