கொரோனா அறிகுறியுடன் இருவர் பலி…! ஆய்வு முடிவு இன்னும் வெளியாயகவில்லையா!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டில் பங்கேற்று விட்டுசொந்த ஊர் திரும்பியிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது சோதனை முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.

 

அவருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என ஆய்வு முடிவுகள் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் உடலை எடுத்து சென்று சுகாதாரத் துறையினர் முன்னிலையில் உறவினர்களை ஒதுங்கி விடாமல் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. அதேபோல சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 34 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்தார்.

 

அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை மாலை யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையிலிருந்து அந்த இளைஞர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இளைஞரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 

இதனால் சடலத்தை உறவினர்களிடம் விட்டு சென்று விட்டனர். சொந்தங்கள் கூட அவரது சடலம் வழக்கம்போல அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply