--- --:--:-- --

இந்தியாவுக்கு உதவி செய்ய சீனா தயார்!

4

கொரொனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரொனா தடுப்பு தொடர்பான காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுங்க துறைகளை சேர்ந்த 2000 அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

 

அப்போது சீனர்களின் தொற்று நோய்தடுப்பு அனுபவத்தை தெற்காசிய நாடுகளின் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற தாங்கள் தயாராக இருப்பதாக சீனா கூறியது.

 

அப்போது இந்திய தரப்பில் முக கவசம் போன்றவை அதிக அளவில் தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon