கடைகளை மூடுமாறு ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் கெடுபிடி..! வியாபாரிகள் பரிதவிப்பு!!

Publish by: மகேந்திரன் --- Photo :


ராமநாதபுரம் நகரில் கடைகள், உணவகங்களை மூடுமாறு நகராட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் வியாபாரிகள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். கொரோனா வைரஸ்க்கு எதிரான நமது போர் வெற்றி பெறட்டும். வீட்டிற்குள்ளேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியில் வராமல் இருங்கள் என்று அறிவித்து இருந்தார். பிரதமரின் இந்த வேண்டுகோளின்படி தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ்நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜ வீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியுடன் மக்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், காலையில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. ஆனால் திடீரென நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து கடைகளையும் மூடச் சொல்லி அறிவுறுத்தி வருவதால் கடை வியாபாரிகளும், உணவகங்கள் நடத்துவோரும் வரை என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.


Leave a Reply