கொரொனா மருத்துவ கப்பலாக மாறிய ராணுவ கப்பல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் கொரொனா பரவிவரும் நிலையில் அந்நாடு இரண்டு ராணுவ கப்பல்களை மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. நியூ பஸ்னஸ் கம்பெட் மற்றும் யூ எஸ்எம்எஸ் மர்சி ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.

 

உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகள் ஆக மாற்றப்படும். நியூயார்க் வாஷிங்டன், ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இந்தக் கப்பல்களில் மருத்துவ சேவை தேவைப்படலாம். ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.

 

இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு உள்ள நெருக்கடியை குறைக்க இயலும். ஒரு கப்பல் நார்போல்க் துறைமுகத்திலும் மற்றொரு கப்பல் சாண்டியாகோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply