இடிக்கு பயந்த நாய்! அச்சத்தை போக்க கட்டியணைத்த சிறுவன்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


இடி புயலுக்கு அஞ்சி நடுங்கிய வளர்ப்பு நாயின் அச்சத்தை போக்க முயற்சித்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இடி சத்தத்தை கேட்டு அஞ்சியுள்ள நாய் அறையின் ஓரத்தில் ஒளிந்திருக்க அதற்கு அருகே சென்ற சிறுவன் மெதுவாக அதை தட்டிக் கொடுத்துள்ளான்.

 

பின்னர் நாயை கட்டி அணைக்கும் சிறுவன் மெதுவாக தடவிக் கொடுத்து அதனுடன் விளையாடிக் கொண்டே அதன் பயத்தை போக்க முயற்சித்துள்ளார்.சிறுவனின் செயலுக்கு இணையத்தில் ஏராளமான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


Leave a Reply