உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் கொரொனா அச்சத்தால் மூடப்பட்டுள்ளது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் கொரொனா வைரசின் தாக்குதலுக்கு இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நாசகார கிருமியின் வேகத்தை கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதையடுத்து இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஆனதும் உலக அதிசயங்களில் முக்கியமானதுமான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply