புதிய இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய மோடி முந்தைய ஆட்சிக் காலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது அரிதாக இருந்தது என்றும், கடந்த ஐந்து வருட ஆட்சி காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9,000 நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
130 கோடி மக்களின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு இருப்பதாக தெரிவித்த பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




