--- --:--:-- --

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல்

5.1

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று ஸ்வீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் மாளிகை லூனே நதியில் வட்ட வடிவமான அமைப்பை கொண்டுள்ளது. மரத்தினாலான நடைபாதை வழியே மட்டும் இதனை சென்றடைய முடியும்.

 

ஆர்டிக் பாத் எனும் மிதக்கும் ஹோட்டலின் நடுவே மிகப்பெரிய ஐஸ்பாக்ஸ் செய்யும் இடமும் அங்கு உள்ளது. கட்டிட கலைஞர்களான ஜோகர், ஹாஸ்ட்ரோ ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டலில் 12 அறைகள் உள்ளன.

அனைத்துமே நீர் சூழ்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டலில் யோகா, தியானம் ஆகியவற்றுக்காக தனி இடமும், குதிரை சவாரி மற்றும் வனவிலங்கு காட்சிகள் உள்ளிட்டவைகளுக்கான இடங்களும் இடம்பெற்றுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon