கேக் உண்ணும் போட்டியில் பங்கேற்ற பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கேக் உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு சிட்னியில் உள்ள கடலோர உணவகம் ஒன்றில் கேக் மற்றும் இறைச்சி சார்ந்த உணவு உண்ணும் போட்டி நடைபெற்றது.

 

அதில் கலந்து கொண்ட 60 வயதான பெண் ஒருவர் நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்பு உணவு வகையான லேமிண்டன்ஷ் என்ற கேக்கை சாப்பிட்டுள்ளார். போட்டியில் வெற்றி பெறுவதற்காக கேக் துண்டுகளை வேகமாக எடுத்து வாய்க்குள் வைத்து திணிக்க முயன்ற போது அந்த பெண்ணிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply