தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட உயிரினங்கள்!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு, அனில் உள்ளிட்ட உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின்பேரில் உடைமைகளை சோதனை செய்தனர். இதில் தாய்லாந்திலிருந்து குரங்குகள், அணில், ஓணான், பல்லி உள்ளிட்ட 27 உயிரினங்களை கூடையில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுரேஷையும், உயிரினங்களையும் வாங்க வந்த மேலும் இருவரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட உயிரினங்கள் மூலம் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளதால் அதனை விமானம் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். உயிரினங்களை கடத்தி வந்தது தொடர்பாக சுரேஷ் உள்ளிட்ட இரண்டு பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply