சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது. விக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கோள் சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது.
இந்த கோள் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும் அதில் ஒன்று சூரியனை விட 15 சதவீதம் பெரியவை என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த கோளை கண்டுபிடித்தது நாசா மையத்திற்கு பயிற்சி பெற சென்ற உல்ஃப் குகியர் என்ற பள்ளி மாணவன் முக்கிய பங்கை வகித்து உள்ளார்.
கோடிக்கணக்கான கேலக்ஸி களின் கூட்டத்தில் நிறைந்துள்ள நட்சத்திரக் கூட்டங்களின் வெளிச்சத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து அங்கு கோள்கள் உள்ளனவா என்பதை நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.