காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்து ஏறி உயிரிழந்தனர். அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்ட ரகமத்துல்லா என்ற மாணவர் இரு மாணவிகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். ஓரகடம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ரகமத்துல்லா பிரேக் பிடித்ததால் நிலைதடுமாறி மூவரும் சாலையில் சரிந்து விழுந்துள்ளன.
அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஏறியதில் ரகமத்துல்லா, மாணவி ரோஷினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹசிரா என்ற மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!