திண்டுக்கல் அருகே இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலைப்படி புதூரை சேர்ந்தவர் திவ்யா பாரதி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவரது சடலம் அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யபாரதியின் கணவர் சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில் அவர் யாரால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






