டி.டி.வி. தினகரனுடன் கைகுலுக்கிய மு.க.ஸ்டாலின்..! சட்டப்பேரவை வளாகத்தில் ருசிகரம்!!
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது இருவரும் கை குலுக்கியபடி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட ருசிகர சம்பவம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் சிறிது நேரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வெளிநடப்பு செய்து சட்டசபையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது, மு.க ஸ்டாலினும் டிடிவி தினகரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் சிரித்தபடி கைகுலுக்கியபடி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் பலரும் டிடிவி தினகரனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த ருசிகர சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் அரங்கேறியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




