--- --:--:-- --

கல்லூரி மாணவிகளுக்கு சிறார் ஆபாசப் படம் காட்டிய 72 வயது முதியவர் கைது

2

சென்னையில் கல்லூரி மாணவிகளுக்கு சிறார் ஆபாச படத்தை காட்டியதாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவிகளுக்கு சிறார் ஆபாச படத்தை காட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற புகாரில் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மோகன் என்பவர் தனது மனைவியை வைத்து மாணவர்களை அழைத்துவரச் செய்து இத்தனை அத்துமீறலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். மோகன் எதற்காக அழைத்து வரச் சொல்கிறார் என தெரியாமலேயே அருகில் வசித்த கல்லூரி மாணவிகளை அவரது மனைவி அழைத்து வந்துள்ளார்.

 

தனது ஐபேடில் வைத்திருந்த ஆபாச படங்களை கல்லூரி மாணவிகளுக்கு காட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மோகன் முயற்சித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரும், கோழிப்பண்ணை அதிபருமான மோகனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

சிறார் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து வைத்திருந்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதை மோகன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

 

சிறார் ஆபாச படங்களுடன் கூடிய அவரது ஐபேடை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனிடையே சிறார் ஆபாச படம் தொடர்பான தகவலை அடுத்து சென்னையில் உள்ள இணையதள மையங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

30 பேரில் ஐபி முகவரிகளை கொண்டு இந்த சோதனை நடப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளம் மூலம் பரப்பிய புகாரில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon