தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் அகமது முஸ்தபா என்பவர் தன்னுடைய சின்னமான சீப்பை வைத்து வாக்காளர்களின் தலையை சீவி பரப்புரையில் ஈடுபட்டு இருக்கிறார்.
தன்னை தேர்ந்தெடுத்தால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்தபா தெரிவித்திருக்கிறார். மேலும் வாக்குக்கு பணம் வழங்க மாட்டேன் என்றும் அந்த நபர் கூறினார்.