மகளை மகிழ்விப்பதற்காக சைக்கிள் டயரை உருட்டி விளையாண்ட நடிகர் அஜீத்
வெயில் திரைப்படத்தில் சிறுவர்கள் சைக்கிள் டயரை உருட்டி கொண்டு செல்லும் போட்டி நடத்துவதை போன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியிலும் இதேபோன்று போட்டி நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற விளையாடியவர் நடிகர் அஜித்குமார். கார் பந்தய வீரராகவும், மோட்டார்சைக்கிள் பந்தய வீரராகவும் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகர் அஜித் தனது மகள் அனுஷ்கா படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் சைக்கிள் டயரை உருட்டி விளையாண்டார்.
சைக்கிள் டயரை உருட்ட முடியாவிட்டாலும் தனது அன்பு மகளை மகிழ்விப்பதற்காக கையில் தூக்கிக்கொண்டு ஓடிச்சென்றார். பள்ளி விழாவில் நடிகர் அஜித்துடன் மனைவி ஷாலினியும் கலந்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




