தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது வரும் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாகவும் நாளை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையாமல் செய்ய, தற்போது முன்கூட்டியே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply