27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இல்லை – தமிழக அரசு
தேர்தல் நடக்கக்கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தருவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுபலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களையும், ஆயிரம் ரூபாய் நியாயவிலை கடைகளில் வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமப்புற பகுதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்றும், அதே நேரத்தில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




