எவ்ளோ அடிச்சாலும் தாங்குரதால என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க! காமெடி பீசு!

நான்கு பேர் நான்கு விதமாக பேசினால் அது நாடு. தம்மைப் பற்றி நான்கு பேர் நான்கு விதமாக பேசினால் அது தமிழ்நாடு என்று நித்தியானந்தா கூறியுள்ளார். எப்போதும்போல் யூடியூபில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

 

நித்யானந்தா தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறுகிறது காவல்துறை. ஆனால் அவரோ நாள்தோறும் வலைத்தளத்தில் வலம் வருகிறார். வழக்கம்போல யூடியூபில் உரையாற்றிய நித்யானந்தா தமிழும், சமஸ்கிருதமும் பழமையான மொழிகள் என்றார்.

 

நாசா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் தமிழர்கள் அதிகளவு பணியாற்றியதாக கூறிய அவர், தமிழையும், சமஸ்கிருதத்தையும் அறிந்தவர்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

 

தனக்கு பல்வேறு இடர்கள் ஏற்பட்டதாக தெரிவித்த நித்யானந்தா அவற்றைத் தாங்கிக் கொண்டது ஏன் என்றும் விளக்கமளித்தார். தான் காமெடி பீஸாக இருப்பது ஏன் என்பதற்கான காரணத்தை கூறினார் நித்தியானந்தா. தமது சீடர்களுடன் கனக்ட்டில் இருக்கும் நித்தியானந்தா காவல்துறைக்கு மட்டும் நாட் ரீச்சபிள் மூடில் இருக்கிறார்.


Leave a Reply