தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைவிட வெங்காய விலை சற்று உயர்ந்துள்ளது. கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் சின்னவெங்காயம் 130 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
திருச்சியில் மொத்த விலையில் சின்னவெங்காயம் 120 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 120 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் சின்னவெங்காயம் 160 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மதுரையில் மொத்த விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கு, பெரிய வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் சின்னவெங்காயம் 160 ரூபாய் வரைக்கும், பெரியவெங்காயம் 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோவையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 110 ரூபாய்க்கு, சில்லரை விற்பனையில் சின்னவெங்காயம் 130 ரூபாய்க்கு, பெரிய வெங்காயம் 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எகிப்து வெங்காயம் மொத்த விலையில் சென்னை, திருச்சி, மதுரையில் கிலோ தலா 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.